முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால் குழந்தைகள் இறப்பு குறைவு விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால் குழந்தைகள் இறப்பு குறைவு விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

வியாழன் , டிசம்பர் 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, கர்பிணி தாய்மார்களுக்காகவும், பச்சிளம் குழந்தைகளுக்காகவும் செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்களால், இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா, செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது தடுக்கப்படுவதுடன், தாய்மார்களின் ஆரோக்கியமும் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.

குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை மூலம், கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டகிராமங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

கடந்த காலங்களில் குறை பிரசவம், பச்சிளம் குழந்தைகளுக்குஏற்படும்சுவாசக்கோளாறு, மூச்சுதிணறல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிரச்சனைகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையை மாற்றும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில், 15சிறப்புப் படுக்கைகள், மையப்படுதப்பட்ட சுவாசக் கருவிகள், இன்குபேட்டர்கள் உள்ளிட்ட வதிகளுடன், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தில் 24 மணி நேரமும் பணி புரியும் வகையில் 4 குழந்தை மருத்துவர்கள், 10 குழந்தை பராமரிப்பு செவிலியர்கள், 3 சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து, பச்சிளம் குழந்தைககள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு உயிரிழப்பு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. கோபி அரசு மருத்துவ மனையில் சராசரியாக மாதம் 90 முதல் 120 குழந்தைகள் பிறக்கின்றன.

மேலும் சிறப்பு ஏற்பாடாக உறவினர்கள் பிறந்த குழந்தைகளை பார்க்கும் வண்ணம் LED திரையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 5 வருடங்களின் இந்த மாதத்தில் மட்டும் அதிக பட்சமாக 144குழந்தைகள் பிறந்துள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் மூலம் இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.