முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

ஞாயிறு, நவம்பர் 27,2016,

 முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. எனவே, இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது.

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்தார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அவர் சிகிச்சை பெற்று வரும் அறையில் தற்போது செய்யப்பட்டுள்ளது.

எனவே, இன்னும் சில தினங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா தானே எழுந்து நடக்க பயிற்சி மேற்கொள்வார் என தெரிகிறது. நன்றாக நடக்க முடிந்ததும், சில தினங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.