முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பண்ணை பசுமை காய்கறி கடை திட்டம் ; தூத்துக்குடியில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பண்ணை பசுமை காய்கறி கடை திட்டம் ; தூத்துக்குடியில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை

வெள்ளி, நவம்பர் 25,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீர்மிகு திட்டமான பண்ணை பசுமை காய்கறி கடை, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இக்கடை தொடங்கப்பட்டு, 810 நாட்களில், 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஏழை-எளியோருக்கு மலிவான விலையில் தரமான பசுமையான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டுவரும் இந்த பண்ணை பசுமை கடைகள் மூலம், விவசாயிகளிடம் இருந்து பசுமையான காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளையும், நுகர்வோர்களையும் நேரடியாக இணைக்கும் இத்திட்டம் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க பண்ணை பசுமை காய்கறி கடை, கூட்டுறவுத் துறை மூலம் தூத்துக்குடியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்களின் அமோக வரவேற்பால், தூத்துக்குடியில் பண்ணை பசுமை கடை தொடங்கப்பட்டு 810 நாட்களில், 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.இங்கு, நாள்தோறும் பசுமையான காய்கறிகள் மலிவு விலைவில் விற்பனை செய்யப்படுவதால், ஏழை-எளிய, நடுத்தர குடும்பத்தினர் வெகுவாக பயனடைந்து வருகின்றனர். இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு , பொதுமக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.