முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதிக்கான வசதி ; அமைச்சர் ஓ.எஸ். மணியன் சட்டப்பேரவையில் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதிக்கான வசதி ; அமைச்சர் ஓ.எஸ். மணியன் சட்டப்பேரவையில் தகவல்

புதன், ஆகஸ்ட் 10,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதிக்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 17 சாயப்பட்டறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.
                                      தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வினா ஒன்றுக்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், திருப்பூரில் நெசவுத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்காக, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதிக்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 17 சாயப்பட்டறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
முன்னதாக, மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரத்தில், ஒரே இடத்தில் 507 பசுமை வீடுகளை கட்டித்தந்து, அதனை அனைத்து வசதிகளையும் கொண்ட நகராக, முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.