முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு

செவ்வாய், செப்டம்பர் 27,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, பரிபூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சந்தவெளி அம்மன் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் ஒன்றியக் கழகம் சார்பில், கோவளத்தில் அமைந்துள்ள உறசரத் சையத் தமீம் அன்சாரி தர்காவில் தொழுகை நடத்தப்பட்டது. மகானுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை வண்ண சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டம், கிடாரங்கொண்டானில் உள்ள ஸ்ரீவித்யா மஹாமேரு பீடத்தில், 216 மூலிகைகளைக் கொண்டு, நடைபெறும் மஹாயாகம் நேற்று தொடங்கியது. அ.இ.அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கொந்தை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், திண்டல் அருள்மிகு வேலாயுதசுவாமி கோயிலில், தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ராஜாவின்கோயிலில் உள்ள மிக பழமையான குலசேகரநாதராஜா கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி நகர அ.இ.அ.தி.மு.க. இளைஞரணி சார்பில், பொம்மிடி பொன்முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள வைகுண்ட வாசப் பெருமாள் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்புதூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் மணக்குடி தேவாலயத்தில் மெழுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர கழகம் சார்பில், பத்ரகாளியம்மன் கோயிலில், குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில், வண்டாம்பாளை பகுதியில் உள்ள ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

திருவேற்காடு அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயிலில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர், தங்கத் தேர் இழுத்து கழகத் தொண்டர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியக் கழகம் சார்பில், பெரியநாகபூண்டி கிராமத்திலுள்ள அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், அம்பத்தூர் அருள்மிகு வலம்புரி சுந்தர விநாயகர் திருகோவிலில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

சேலம் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், குமாரசாமிபட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில், அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

அஸ்தம்பட்டி பகுதி கழகம் சார்பில், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வேலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், ராணிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டையில் உள்ள சாதிக்ஷா அவுலியா தர்காவில், மல்லிகை மலர்களால் ஆன போர்வை அணிவித்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அதே பகுதியில் உள்ள உலகின் மீட்பர் கிறிஸ்தவ ஆலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவெறும்பூர் ஸ்ரீஜெய் சந்தோஷிமாதா கோயிலில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. துவாக்குடியில் உள்ள கருப்பண்ணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கள்ளபிரான் கோயிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், பொட்டல்புதூர் முகையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.