முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு : 1,061 முகாம்களில் சுமார் 25 லட்சம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு : 1,061 முகாம்களில் சுமார் 25 லட்சம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர்

செவ்வாய், டிசம்பர் 01,2015,

மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 5 நாட்களில் ஆயிரத்து 61 முகாம்களில் 24 லட்சத்து 61 ஆயிரம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க, மருத்துவத் துறையின் சித்த மருத்துவ பிரிவு மூலம் அரசு மருத்துவமனைகள் உட்பட ஆயிரத்து 61 மையங்களில் கடந்த 25-ம் தேதி முதல் நேற்றுவரை 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன்மூலம், 10 லட்சத்து 71 ஆயிரத்து 918 ஆண்கள், 10 லட்சத்து 20 ஆயிரத்து 255 பெண்கள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 987 குழந்தைகள் என மொத்தம் 24 லட்சத்து 61 ஆயிரத்து 160 பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.