முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

சனி, மார்ச் 05,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் சாவகாட்டுப்பாளையத்தில் 200 கைத்தறி நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நெசவாளர்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், மின் ராட்டைகள், ஜக்காடு தறி பெட்டி, மானியக்கடன்கள், நெசவாளர் காப்பீடு திட்டம், நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.

அந்தவகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சாவகாட்டுபாளையத்தில், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் 200 பேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜக்கார்டு மின்மோட்டார், மின்ராட்டை உட்பட 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்த 52 விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை மூலம், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுழற்தெளிப்பான்கள் வழங்கப்பட்டன. இதனால், முள்ளங்கி, பீட்ரூட், வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.