முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளி, செப்டம்பர் 16,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பபட்டது. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளான நேற்று, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சார்பாக, கழக மக்களவைக் குழு செயலாளர் டாக்டர் க.காமராஜ், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.செங்குட்டுவன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் உள்ள அ.இ.அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், டெல்லி மாநில கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு புறநகர் மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று நான்கு ரோட்டில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மூக்காரெட்டிபட்டியில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்வலமாகச் சென்ற அ.இ.அ.தி.மு.க.வினர் தியாகதுருகம் பேருந்தும் நிலையம் அருகேயுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

கரூர் மாவட்டத்தில் வெங்கமேட்டில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடிகுப்பத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர். இதேபோல், ஆர்.கே.பேட்டை, திருத்தணி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று திண்டிவனம் சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகை, திருவாரூர், அரியலூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பபட்டது.

புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து அ.இ.அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.