முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சனி, 21 நவம்பர் 2015

தமிழகம் முழுவதும் 416 நடமாடும் மருத்துவமனைகள் தொடஙகப்பட்டுள்ளன. சென்னையில், 14 நடமாடும் மருத்துவமனைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

             சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நடமாடும் மருத்துவமனைகளை, சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
              அப்போது விஜய பாஸ்கர் பேசுகையில்,முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில் “மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனைகள் செயல்படும். இந்த மருத்துவக்குழுவில், ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தகர், மருந்துவ ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றிருப்பார்கள்.இந்த மருத்துவ குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பார்கள்.” என்று விஜய பாஸ்கர் கூறினார்.