முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயன்

முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயன்

புதன், மார்ச் 30,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, செயல்படுத்தி வரும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 69 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றமடைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் லட்சோப லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்புத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கர்ப்பிணிப் பெண்களின் ஆரோகியத்திற்காக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின்கீழ் கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் உடல் நலத்தை காத்துகொள்ள 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 69,204 கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்துள்ளனர். தங்களது உடல் ஆரோகியத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் மூலம் உதவிதொகையை அளித்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நெஞ்சார்ந்து நன்றியை தெரிவித்து கொண்டனர்.