முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி கோடநாட்டில் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பால்குடம் ஏந்தி சிறப்பு பூஜை

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி கோடநாட்டில்  எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பால்குடம் ஏந்தி சிறப்பு பூஜை

புதன், அக்டோபர் 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் சார்பில் மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

கோடநாட்டில் அமைந்திருக்கும் கொரமேடு ஜெய பக்தி ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் ஜெய கணபதி ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்து ஆயிரத்து எட்டு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று கிரிமி நாடு பகுதியில் உள்ள ஜெயசக்தி கணபதி ஆலயம், அழகன் முருகன் ஆலயம், ஆயிரம் கண் மாரியம்மன் ஆகியவற்றில் சிறப்பு பால்குடம் அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது ஆயிரத்து எட்டு தேங்காய்கள் உடைத்தும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இதில், சட்டமன்ற உறுப்பினர், கோடநாடு எஸ்டேட் ஊழியர், தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.