முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை க்கு பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை க்கு பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு

சனி, மே 07,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, சட்டமன்றத் தேர்தலையொட்டி, வெளியிட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படவும், தொழில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணிக்குச் சென்றுள்ள தமிழகம், மேலும் வளம்பெற்று, வேகமாக வளர்ச்சியடைவும், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவ மக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள், மகளிர், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயரவும் வழிவகுப்பதாக, பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் Cell Phone எனப்படும் கைபேசி விலையின்றி வழங்கப்படும் – திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம், 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் – மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் – உப்பளத் தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு ‘Set Top Box’ விலையின்றி வழங்கப்படும் – மீன்பிடி தடைக்காலம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரண உதவிகள் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் – சிறு, குறு விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளும், மக்கள் நலத்திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் அனைத்து அம்சங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இதன்மூலம், தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயரும் என்றும், பொருளாதார வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.