முதலீட்டுக்கு உகந்த சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

முதலீட்டுக்கு உகந்த சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016,

சென்னை:சட்டசபையில் தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். அப்போது அவர், தொழில்துறை குறித்து சில கேள்விகளை அவர் எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரையிலான காலக்கட்டத்தில் கூடுதலாக ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடு ரூ.85,523 கோடி. மே 2011 மார்ச் 2016 வரையிலான காலக்கட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு 193.45 சதவீதத்தை எட்டி புதிய சாதனை படைக்கப்பட்டது என்று தொழில்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மாநிலங்களில் முதலீட்டுக்கு உகந்த சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தை சேர்ந்த தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வெளியிட்ட பல்வேறு புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.