முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடல்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடல்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017,

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் 2வது கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 63 பார்கள் இன்று முதல் மூடப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு முதல் கையெழுத்திட்டார். ஏற்கனவே 500 கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் 500 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள 105 கடைகளும் 63 பார்களும் இன்று முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் 44 டாஸ்மாக் கடைகளும் 20 பார்களும் மூடப்படுகின்றன. அதே போல் சேலம் மண்டலத்தில் 133 கடைகளும் திருச்சியில் 119 கடைகளும், மதுரையில் 99 கடைகளும் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.