முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2017,

சென்னை ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ்ஐ ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இன்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன், இன்று காலை திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என பதிவு செய்திருந்தார். கட்சியின் ஒற்று மைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுப் பேன் என்றும் அவர் தெரி வித்திருந்தார்.

இதைத் தொடர்ந்துஇன்று பகல் 1 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத் துக்கு வந்த பாண்டியராஜன், தனது ஆதரவை தெரிவித்தார். திடீரென கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணிக்கு வந்த அமைச்சர் பாண்டியராஜனை தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பின்னர், நிருபர்களிடம் கே.பாண் டியராஜன் கூறியதாவது:

3 வருடம் 6 மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் என்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டேன். அதிமுக எஃகு கோட்டையாக இருக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு எம்எல் ஏக்களும் இதைத்தான் எதிர்பார்க் கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எந்த வகையிலாவது அதிமுகவில் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். வாக்களித்த மக்கள் எல்லோரும் ஓபிஎஸ் ஆட்சி அமைய வேண்டு மென விரும்புகின்றனர். அந்த வகையில் மக்களை சந்தித்தோம். மக்களின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருக்கிறது. எனவே, அவரது தலைமையிலான ஆட் சிக்கு ஒருங்கிணைந்து நிற்போம். அதற்காக பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.