முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் ராமராஜன் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் ராமராஜன் ஆதரவு

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017,

சென்னை ; எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், அதிமுக பிரமுகருமான ராமராஜன், நடிகர்கள் அருண்பாண்டியன், தியாகு ஆகியோர் நேற்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தனர்.

பன்னீர் செல்வம் அணியில் வந்து இணைந்த நடிகர் ராமராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: –

ஓ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?. ஓயாமல் பொறுப்பாக செயல்படுபவர் என்பது தான் அர்த்தம். பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை. அம்மா அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ்.

அப்படிப்பட்டவர் தான் நம் முதல்வராக இருக்க வேண்டும். அம்மாவின் மறைவுக்கு பிறகு எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்துவிட்டது. ஓ. பன்னீர்செலவம் தான் தற்போது நம்முடைய தலைவர். அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழி நடப்பவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.