முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் 234 தொகுதிகளிலும் வெற்றியை தரும் : தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் 234 தொகுதிகளிலும் வெற்றியை தரும் : தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது

செவ்வாய், ஏப்ரல் 26,2016,

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்கள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்றார் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவரும், கடையநல்லூர் பேரவைத் தொகுதி வேட்பாளருமான சேக்தாவூது.

கடையநல்லூர் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்கருப்பன் எம்.பி. தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வசந்திமுருகேசன் எம்.பி., முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு இணைச் செயலர் ஆனைக்குட்டிப்பாண்டியன், மாவட்ட துணைச் செயலர் வி.பி.மூர்த்தி, நகரச் செயலர்கள் கிட்டுராஜா, குட்டியப்பா, சுசீகரன், ஒன்றியச் செயலர்கள் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நயினாமுகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் முத்துக்கருப்பன் எம்.பி. பேசுகையில், தமிழக முதல்வர் கடையநல்லூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளார். அவரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

வேட்பாளர் சேக்தாவூது பேசியது: தமிழக முதல்வரின் ஒவ்வொரு திட்டமும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்றார்.

நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் கமாலுதீன், அயுப், பெருமையா பாண்டியன், பெரியதுரை, அழகர்சாமி, செங்கலமுடையார், வழக்குரைஞர் அதிவீரராமபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.