முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தை அடுத்த வாரணவாசி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தை அடுத்த வாரணவாசி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம்

திங்கள் , ஏப்ரல் 18,2016,

18 அதிமுக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களையும் அதன் கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர்களில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கடந்த 9 ம்தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அதன் அடுத்தக்கட்டமாக கடந்த 11 ம்தேதி விருத்தாசலம் தொகுதியில் கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 13 அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோரி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 11 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 15 ம்தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 14 தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.  இதன் தொடர்ச்சியாக இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத்தை அடுத்த வாரணவாசி மைதானத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  பேசுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி, ஸ்ரீபெரும்புதூர் (தனி),. பொன்னேரி (தனி). பல்லாவரம், திருத்தணி,தாம்பரம் திருவள்ளூர்,செங்கல்பட்டு,. பூந்தமல்லி (தனி), திருப்போரூர்,ஆவடி,செய்யூர் (தனி) அம்பத்தூர், மதுராந்தகம் (தனி),செய்யார் உத்திரமேரூர். வந்தவாசி (தனி) ஆகிய 18 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஒரே மேடையில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிமுகப்படுத்தி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.