முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் வேலூரில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் வேலூரில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன

செவ்வாய், ஜூன் 28,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. தாயுள்ளத்துடன் தாய்வீட்டு சீதனமாய் சீர்வரிசைகளை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு கர்ப்பிணிப் பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், ஜோலார்பேட்டை மற்றும் நாற்றம்பள்ளி ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 360 கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அமைச்சர் திரு.கே.சி.வீரமணி, தமிழக அரசின் சார்பில், புடவை, வளையல், பூ, பழம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவை மிகுந்த கலவை சாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தாயுள்ளத்துடன், தாய்வீட்டு சீதனமாய் சீர்வரிசை பொருட்களை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.