முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

338 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நேர்காணல் நேற்று  நடைபெற்றது.

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செனனை, ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதனை, மாவட்ட ஆட்சியர் திரு. ஹரிஹரன் தலைமையில், ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ப.மோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில், 338 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 22 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நேர்காணல் நேற்று  நடைபெற்றது. 10-ம் வகுப்பு, +2 படித்தவர்கள், ITI, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் மூலம் தங்களுக்கு வேலை கிடைக்க வழிவகை செய்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, இளைஞர்களும், இளம்பெண்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.