முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா’ குடிநீர்” போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு அறிவுரை!

முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா’ குடிநீர்” போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு அறிவுரை!

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

தமிழகத்தில் குறைந்த விலையில், முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த’அம்மா’ குடிநீர்” விற்கப்படுகிறது. அதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடிக்கு, பொதுஜனம், ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

பிப்., 29ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனைகளை, ‘mygov.in’ என்ற இணைய தளத்தில், பொதுமக்களை பதிவு செய்ய, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, குறிப்பிட்ட கால வரையரைக்குள், 6,642 பேர், பல ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.
*பெற்றோரைபராமரிக்கும் வாரிசுகளுக்கு வரி விலக்கு தர வேண்டும்
* வருமான வரி உச்சவரம்பை, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்
* மதமாற்றத்தை தடை செய்யவேண்டும்இவ்வாறு விதவிதமாக பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

வி.பிரேம்நாத் என்பவர், ‘தமிழகத்தில், 10 ரூபாய்க்கு விற்கப்படும் தரமான, ‘அம்மா’குடிநீர், மக்களுக்கு பேருதவியாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களோ, ஒரு பாட்டில் நீரை, 20 ரூபாய்க்கு விற்று, அதிக லாபம் சம்பாதிக்கின்றன. எனவே, தமிழகத்தை பின்பற்றி, மக்களுக்கு, குறைந்த விலையில் தரமான குடிநீர் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, கோரியுள்ளார்.
இந்த கோரிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரையில் இடம் பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.