முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைக்கும் : அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைக்கும் :  அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

சனி, ஏப்ரல் 09,2016,

அண்ணாநகர் தொகுதி அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அரும்பாக்கம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது.தீவுத்திடலில் நடைபெறும் இந்த பிரச்சார கூட்டத்தில் அண்ணாநகர் தொகுதியில் இருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் செல்ல அண்ணாநகர் தொகுதியில் நடந்த அண்ணாநகர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஏராளமானபேர் மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சரும் ஆயிரம்விளக்கு தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளருமான பா.வளர்மதி, அண்ணா நகர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளருமான தி.நகர் பி.சத்தியா ஆகியோர் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது;
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் அம்மாதான் வேட்பாளர்.
9–ந்தேதி முதலமைச்சர் அம்மா சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் அம்மா எழுச்சியுரையாற்றுகிறார். 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அம்மா பேசுகிறார். இந்த தொகுதியில் இருந்து 20 ஆயிரம் பேர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வடசென்னை வடக்கு மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் இருந்தும் 80 ஆயிரம் பேர் அம்மாவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சிகள் மிரளும் அம்மாவின் உரையையும் அந்த கூட்டத்தையும் பார்த்து தி.மு.க. திக்குமுக்காடி போக வேண்டும். அனைத்து கட்சிகளும் மிரள வேண்டும். 234 தொகுதிகளிலும் அம்மா வெற்றி பெற சூளுரை ஏற்று களப்பணியாற்றுங்கள்.
இவ்வாறு அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசியதாவது;
வரும் 9–ந்தேதி (சனிக்கிழமை) முதலமைச்சர் அம்மா சென்னை தீவுத்திடலில் தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். அம்மாவின் எழுச்சி உரையை கேட்டாலே நமக்கு உற்சாகம் வரும். அம்மாவின் உரையை கேட்டு எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது. கருணாநிதி மலைத்து போக வேண்டும். ஸ்டாலின் கிறுகிறுத்து போக வேண்டும். மக்கள் அம்மா பக்கம் இருக்கிறார்கள். அம்மாதான் முதலமைச்சராக வர வேண்டும் என்று யாரை கேட்டாலும் சொல்கிறார்கள். எங்கும் அம்மா அலைதான் வீசுகிறது. 234 தொகுதிகளிலும் அம்மா வரலாற்று சாதனை வெற்றி பெற்று மீண்டும் 6–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும். இதற்கு அனைவரும் இரவு பகல் பாராது கடுமையாக உழைக்க வேண்டும். தீவுத்திடலில் அம்மாவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அண்ணாநகர் தொகுதியில் இருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் வர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.
அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி. தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் எஸ்.பவானிசங்கர், டி.தசரதன், ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், எஸ்.அமீர்பாஷா எம்.சி., வ.சுகுமார்பாபு எம்.சி., பி.எஸ்.ராதாகிருஷ்ணன், டி.ஜீவாதீனன் எம்.சி., பி.செல்வி எம்.சி., மல்லிகா கந்தன் எம்.சி., வாசுகி எம்.சி., டி.பக்தவத்சலம், கூடல் வே.கோவிந்தன், சி.சடையன், கோ.தமிழ்செல்வன், கே.வசந்தகுமார், கே.குப்பன், கோ.தமிழ்செல்வன், ஏ.எஸ்.பச்சையப்பன், பா.ரங்கராஜன், மு.ஸ்ரீராமன், கே.முருகன், ஏ.தமீம்அன்சாரி, பி.தீனன், டி.ராஜ்குமார், ரேணுகா, நா.ரா.பாபு, வி.ஜனார்த்தனன், ரேவதி ஹரிஹரன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.