முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பூஜை

முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பூஜை

ஞாயிறு, அக்டோபர் 16,2016,

திருவனந்தபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி கேரளாவில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தவருகின்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவின் கன்னூர் அகத்தியர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்.

வரலட்சுமி முதல்வர் ஜெயலலிதாவிற்காக பூஜை நடத்தியதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அம்மா விரைவில் நலம் பெற அகஸ்தியர் ஆசிரமத்தில் பூஜை நடத்தியதாகவும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.