முதல்வர் ஜெயலலிதா நல்லா இருக்காங்க விரைவில் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் : நடிகை சரோஜாதேவி

முதல்வர் ஜெயலலிதா நல்லா இருக்காங்க விரைவில் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் : நடிகை சரோஜாதேவி

திங்கள் , அக்டோபர் 31,2016,

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் என்று அவரை இன்று நலம் விசாரிக்கச் சென்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார். அங்கு அதிமுக தலைவர்களிடம், அமெரிக்க மருத்துவரிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை விசாரித்தார்.

பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன். அவர் முதல்வரின் உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள். அதனால் அவர் சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு சென்று விடுவார். ஒரு சோதனை மாதிரி இது அவருக்கு வந்திருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.என்று சரோஜா தேவி தெரிவித்தார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.