முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணித் தாய்மார்களும்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன் பெரும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணித் தாய்மார்களும்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன் பெரும் வகையில்   சிறப்பு மருத்துவ முகாம்

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் 15 மண்டலங்களிலும் குடும்பநலத்துறை சார்பில் 29ம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் அமைச்சர் மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்றாநோய்க்கான நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொற்றும் நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் வருமான இழப்பு மற்றும் அதிகப்படியான செலவினம் ஆகிய சுமைகளை குறைக்கும் விதமாக பொதுமக்களின் நலனுக்காக 1 முதல் 15 மண்டலங்களில் 15 மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகிறது.

அதன் துவக்கமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இன்று (23.02.2016) மண்டலம்-10, வார்டு-134, காமராஜர் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாம்களில் ஆண்கள் பொது மருத்துவம், பெண்கள் பொது மருத்துவம், , சித்தா, யுனானி, பல் பரிசோதனைகள், நீரழிவு நோய், இரத்த சர்க்கரை அளவு, நீரழிவு நோய் கட்டுப்பாட்டிற்கான பரிசோதனை, இரத்த அழுத்தம், இருதய நோய், ஈ.சி.ஜி., எக்கோ, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கண் பார்வை குறைவு, மற்ற நோய்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), தாய்மார்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), காய்ச்சல், மூட்டுவலி மற்றும் உடல்சோர்வு, இரத்த சோகை, கண்புரை நோய், தோல் வியாதிகள், மலேரியா, காசநோய், காது மூக்கு தொண்டை, குழந்தை நலம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று(23.02.2016) 15 மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

தொடர்ந்து, மண்டலம்-8, வார்டு-102, செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கி பிப்ரவரி 29 வரை நடைபெறும் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமை கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட குடும்பநலத்துறையின் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 23 முதல் 29 வரை பெருநகர சென்னை முழுவதும் “13 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்” நடைபெற உள்ளது. இம்முகாமில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலயது கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

இச்சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி, இரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரியதுரைத்தல் ஆகியவை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் நடைபெற உள்ள சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.