முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 ஜோடிகளுக்கு 68 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 ஜோடிகளுக்கு 68 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

திங்கள் , பெப்ரவரி 29,2016,

மதுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பாண்டிகோயில் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 68 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.சுந்தரராஜ், என்.சுப்பிரமணியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களுக்கு தாலி, திருமண ஆடைகள், சீர்வரிசை பொருள்களாக பீரோ, கட்டில்கள், மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட 68 பொருள்கள் வழங்கப்பட்டன. பின்னர், திருமண விருந்து நடைபெற்றது.தாயாக இருந்து தங்களது திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மணப்பெண்கள் தங்களது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.