முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

வெள்ளி, நவம்பர் 18,2016,

சென்னை : முதல்வர்  ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார். அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார். 

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், நாளமிள்ளா சுரப்பி மருத்துவ நிபுணர் ஆகிய  நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர். அவரது உடல் நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி 3-வது முறையாக செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் முழு குணமடைந்த தகவலை தெரிவித்தார். அவர் எப்போது வேண்டுமானலும் தனது பணியை துவக்கலாம் என கூறினார்.

சென்னையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் நலமாக உள்ளார். வழக்கமான உணவுகளையே அவர் உட்கொண்டு வருகிறார்.மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவருக்கு தேவையான உணவு அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுவிட்டது. இயற்கையாகவே அவர் சுவாசித்து வருகிறார்.தேவைப்படும் போது மட்டுமே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.அவர் நலமுடன் இருக்கிறார், நன்றாகவே இருக்கிறார்.முதல்வர் ஜெயலலிதா எப்போது விரும்பினாலும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.