முதல்வர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

முதல்வர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

சனி, பெப்ரவரி 13,2016,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. வனத்துறையினரும், ஊரக வளர்ச்சித்துறையினரும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
68-வது பிறந்தநாள்
வருகிற பிப்ரவரி 24-ந்தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வனத்துறையினரும், ஊரக வளர்ச்சித்துறையினரும் செய்துள்ளனர்.
இந்த திட்டத்தின் படி, முதல் மரக்கன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடப்படுகிறது. இதற்கான இடத்தை வனத்துறை அமைச்சர் ஆனந்தன் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார்.
முதல் மரக்கன்று நடும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா முதல் மரக்கன்றை நட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.