முதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, நவம்பர் 06,2016,

முதல்வர் ஜெயலிதாவின் வரலாற்று சாதனைகளையும் தி.மு.க. தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்து சொல்லி தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர்ஓ .பன்னீர்செல்வம் கூறினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் சிந்தாமணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஒன்றியம், அவனியாபுரம் பகுதி, திருப்பரங்குன்றம் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது;

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு செய்த தியாகங்களை எடுத்துச் சொன்னால் ஒரு நாள் போதாது, சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஆட்சியைக் காட்டிலும் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிதான் திறம்பட உள்ளது, முதன்மையாக உள்ளது என்பதனை இந்திய திருநாட்டில் உள்ள தலைவர்களும் அறிவார்கள்.
சட்டமன்ற வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் முறையாக ஆளும் கட்சியே ஆளும் பொறுப்பை உருவாக்கி புதிய வரலாறு படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். காலத்தில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்த கழகத்தை இன்று 1 கோடி தூய தொண்டர்கள் கொண்ட எவராலும் அசைக்க முடியாத மாபெரும் எஃகு கோட்டையாக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி உள்ளார். இந்த மாபெரும் இயக்கத்தை கட்டி காப்பாற்றிட தொடர்ந்து 28 ஆண்டுகாலமாக பொதுச்செயலாளராக பணியாற்றி தீயசக்திகளால் ஏற்பட்ட வேதனைகளையும், சோதனைகளையும், எல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்காகவே தவவாழ்வை மேற்கொண்டு வருபவர் முதல்வர் ஜெயலலிதா.முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்று போற்றும் சாதனைகளையும், தி.மு.க. தமிழகதிற்கு செய்த துரோகங்களை பட்டியலியிட்டு ஒவ்வொரு வாக்குசாவடி தோறும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்து கூறி திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 291 வாக்குசாவடிகளும் ஜெயலலிதாவிற்கு அமோக வெற்றியை பெற்று தந்து தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்து திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோ்தலில் மகத்தான வெற்றியினை பெற்று தர நாம் பாடுபடவேண்டும். மதுரை என்றைக்குமே அம்மாவின் எஃகு கோட்டை அதனை நிரூபிக்கும் வண்ணம் எதிர்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச்செய்து 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருப்பரங்குன்றம் கழக வேட்பாளர் ஏ.கே.போசை வெற்றி பெறச் செய்து முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு செல்லும் போது அந்த வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., வேட்பாளர் ஏ.கே.போஸ், கடம்பூர் ராஜு, டாக்டர் மணிகண்டன், மா.பா. பாண்டியராஜன் பெஞ்சமின், ராஜலெட்சுமி, அனைத்து உலக எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், கழக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வேணுகோபால் எம்.பி, கழக இளைஞரணி செயலாளர் அலெக்ஸாண்டர், தேனி மாவட்ட கழக செயலாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் மருதுராஜ், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் சி.தா. செல்லபாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி, மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள், சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாஜாலபாத் கணேசன், மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.