முல்லைப்பெரியாறு பாசன பகுதியில் அமோக விளைச்சல்:அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முல்லைப்பெரியாறு பாசன பகுதியில் அமோக விளைச்சல்:அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

புதன், ஜனவரி 06,2016,

முல்லைப்பெரியாறு பாசனத்தால் பயன்பெரும் மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு அமோக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா இடைவிடாது நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதால் தங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அல்லும் பகலும் அயராது பாடுப்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, இடைவிடாது நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசன நீர் தேவையான அளவிற்கு கிடைத்ததால் விவசாயிகள் கரும்பு, பூக்கள் உள்ளிட்டவற்றை பயிரிட்டனர். முதலமைச்சர் உத்தரவின்படி பாசனத்திற்கு உரிய நீர் மற்றும் வேளாண் பொருட்கள் கிடைத்ததாலும் அமோக விளைச்சல் கண்டுள்ளது. விளைவிக்கப்பட்ட கரும்பு, பூ வகைகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கடந்த 2 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு அணை பாசனப் பகுதியில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாகத் தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டதால் அதன் பலன் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.