ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனை வந்தார் ; முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனை வந்தார் ; முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

ஞாயிறு, அக்டோபர் 16,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று விசாரித்தார்.முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை 6-35  மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கார் மூலம் நுழைந்தார், அங்கு முதல்வருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களையும் மூத்த அமைச்சர்களையும் சந்தித்து பேசினார், முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் டாக்டர்களிடம் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார், பின்னர் இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார், ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். இதுதொடர்பாக, ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், “அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.