ராஜாஜி அரங்கில் மக்கள் வெள்ளம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

ராஜாஜி அரங்கில் மக்கள் வெள்ளம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

செவ்வாய், டிசம்பர் 06,2016,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு செய்தியை கேள்விபட்டு, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அஞ்சலி செலுத்தப்படும் ராஜாஜி அரங்கம் அருகே பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர். அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்கள் அஞ்சலி செலுத்திய பின் இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள M.G.R சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.