ரூ.100 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.100 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ 100 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கான 700 குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

பொதுப்பணித் துறையின்சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான “ஊ-வகை” 700 குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சிமூலமாகத்திறந்து வைத்தார். மேலும், 158 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டடங்களையும், நிதித் துறை சார்பில்11 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கருவூல அலுவலகக்கட்டடம், 18 சார்கருவூல அலுவலகக் கட்டடங்களையும், 1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல புள்ளி இயல் இணை மற்றும்துணை இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள், 5 கோட்ட அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்து, 626 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பொதுப்பணித் துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அரசு குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர்அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், வணிகவரி அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உட்பட பல பொதுக் கட்டடங்களுக்கு திட்டமிட்டு,வடிவமைத்து, மதிப்பீடு தயாரித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல், பாரம்பரியகட்டடங்களைப் பாதுகாத்தல் மற்றும் புனரமைத்தல், விலை மதிப்பற்ற இயற்கைவளமாகக் கருதப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்த ஏதுவாக பாசன அமைப்புகளுக்கான கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியபணிகளை பொதுப்பணித் துறையின் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுமுனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான “ஊ-வகை” 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார். இக்குடியிருப்புகளானது, ஒவ்வொரு கட்டடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டட தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கட்டட தொகுதிக்கும் 2 மின்தூக்கிகள், தீ தடுப்பு உபகரணங்கள், குடிநீர், தரைத் தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.