ரூ.38.35 கோடி செலவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.38.35 கோடி செலவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வியாழன் , பெப்ரவரி 18,2016,

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ரூ 38 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வியியல், நூலகம் மற்றும் விடுதி கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா  திறந்துவைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள், உயர்கல்வி கற்று அதன்மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்று, பொருளாதாரத்தில் உயர்ந்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் 54 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் துவங்கப்பட்டு அதற்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 38 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வியியல், நூலகம் மற்றும் விடுதிக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், திருநெல்வேலி – அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், இராஜாமடம் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கட்டடம்; கோயம்புத்தூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூர் – பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் சார்பில் வேலூரில் மாவட்ட அறிவியல் மையத்தில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முப்பரிமாண அறிவியல் திரையரங்கம்; என மொத்தம் 78 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் மேலும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரியில் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், ரகுநாதபுரம் அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரியில் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசுபலவகை தொழில் நுட்ப கல்லூரியில் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; தருமபுரி மாவட்டம்,  கடத்தூர் அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரியில் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்கள்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நிர்வாகம் மற்றும்கல்வியியல் கட்டடங்கள்;என மொத்தம் 124 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர்.பி. பழனியப்பன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலாளர்  அபூர்வா, மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.