ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பாலங்கள், சாலைப் பணிகள், கட்டடங்களையும் திறந்து வைத்து ரூ.1002 கோடியில் பாலம், மேம்பாலம், சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஜெயலலிதா

ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பாலங்கள், சாலைப் பணிகள், கட்டடங்களையும் திறந்து வைத்து ரூ.1002 கோடியில் பாலம், மேம்பாலம், சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் 599 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பாலங்களையும், 2 ரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், 7 கட்டடங்களையும் திறந்து வைத்து, ஆயிரத்து 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள், மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 792 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய பாலம் திறக்கப்படுவதால் நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத்தலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை – கிழக்கு கடற்கரை சாலையில், வாயலூர் அருகில் 105 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூரில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சேலம் மாவட்டம் – எடப்பாடியில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பாப்பம்பாடியில் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், கவர்பனையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுவேதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஓமலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கருங்கல்லூரில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சேலம் கேம்பில் 23 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் எல்லீஸ் உபரிநீர் போக்கின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; ஈரோடு மாவட்டம் – அண்ணாநகரில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், எல்.பி.பி.கால்வாய் மில்மேடில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எல்.பி.பி. கால்வாய் பெரியார் நகரில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பாலங்கள்;

தருமபுரி மாவட்டம், பேதாதம்பட்டியில் காட்டாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே 43 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

கரூர் மாவட்டம் – எழுநூத்தி மங்கலத்தில், நொய்யல் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் நச்சலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் – தோளம்பாளையத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சொக்கனூரில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணுகுசாலையுடன் கூடிய பாலம் மற்றும் இரத்தினபுரியில் 19 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 11-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஓடத்துறையில் 44 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவு எண் 248 -க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்;

திருப்பூர் மாவட்டம், செங்காட்டு சாலையில் 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் அணுகுசாலை; தஞ்சாவூர் மாவட்டம் – ஒக்கநாட்டில் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தென்னமநாட்டில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

திருவாரூர் மாவட்டம் – சோளக்குறிச்சியில் நாட்டாற்றின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலம், பேரையூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், விளத்தூரில் மல்லியனாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் செட்டிசத்திரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

நாகப்பட்டினம் மாவட்டம் – சந்திரப்பாடியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஓதவந்தான்குடியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

தேனி மாவட்டம் – அம்மச்சியாபுரத்தில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் முதலக்கம்பட்டி – வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

திருநெல்வேலி மாவட்டம் – சித்தூரில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், பழைய குற்றாலத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், குறுங்காவனத்தில் 3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தெற்கு மலையடிப்பட்டில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

தூத்துக்குடி மாவட்டம் – ஊத்துப்பட்டியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஓசனூத்துவில் 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், டி.சுப்பையாபுரத்தில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 19 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

விருதுநகர் மாவட்டம், சுத்தமடத்தில் 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

சிவகங்கை மாவட்டம் – பாவாகுடியில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் சில்லாம்பட்டியில் விருசுழி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

இராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 7 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

திருவள்ளூர் மாவட்டத்தில் 188 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை; நாமக்கல் மாவட்டம் – ராசிபுரத்தில் 23 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராசிபுரம் புறவழிச்சாலை;

சென்னை – சைதாப்பேட்டையில் 38 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகக் கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டம்- செங்கிப்பட்டியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஒரத்தநாட்டில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகைகள்;

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம்; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம்; சேலம் மாவட்டம், தலைவாசலில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளள பயணியர் மாளிகை; என மொத்தம் 675 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 பாலங்களையும், 2 ரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் பயணியர் மாளிகைகளையும் முதலமைச்சர்  இன்று திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நகர்புற பேருந்து நுழைவுவாயில் – காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் 93 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டிலான மேம்பாலம்; சென்னை, வேளச்சேரி விஜயநகர பேருந்து நிலையம் அருகில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்; காஞ்சிபுரம் மாவட்டம், மேடவாக்கத்தில் 146 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலம்; சேலம் மாவட்டம் – சேலம் மாநகரில் ஐந்து சாலைகள் சந்திப்பில் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு அடுக்கு சாலை மேம்பாலம்;

விழுப்புரம் மாவட்டம், ஆறுத்தாங்குடி ஓடையின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; திருவாரூர் மாவட்டம், தட்டாங்கோவிலில் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; கடலூர் மாவட்டம் – மேலூரில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம், நடராஜபுரத்தில் உப்பனாற்றின் குறுக்கே 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலம்; திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 15 -க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; வேலூர் மாவட்டம் – வேலூர் மாநகரத்தில் 36 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 126 மற்றும் 127-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கண்ணடிக் குப்பத்தில் 25 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 78 -க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் – பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் 30 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 7-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் 59 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே கடவு எண் 2, 27 மற்றும் 308-க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம்; தஞ்சாவூர் மாநகரில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட புறவழிச்சாலை; சேலம் மாவட்டம் – எடப்பாடியில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட புறவழிச்சாலை; தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 51 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலை மறுகட்டமைக்கும் பணி; என மொத்தம் 1002 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 பாலங்கள், 5 ரயில்வே மேம்பாலங்கள், 4 மேம்பாலங்கள், 4 சாலை பணிகள் ஆகிய பணிகளுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி, அரசு தலைமைக் கொறடா திரு.ஆர். மனோகரன், தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் திரு. கோ.அர. இராசேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.