வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலின் தென்கிழக்கே, கேரள மாநில கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாகவும், வங்கக் கடலின் தெற்கு பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலக் கடல் பகுதியில் அரபிக் கடலுக்கு தென் கிழக்கே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, நேற்று லட்சத்தீவு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் தெற்குப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என்பதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான செம்பரம்பாக்கம், உத்திரமேரூர், பூவிருந்தவல்லி, கொளப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்துள்ளதால், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாரித்துள்ளது.