விலையில்லா ஆடுகள் -கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதியுதவி : லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

விலையில்லா ஆடுகள் -கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதியுதவி : லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

புதன்கிழமை, மார்ச் 15, 2017,

புதுடெல்லி : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பால் உற்பத்தியும் உயர்ந்துள்ள நிலையில், தேசிய பால் உற்பத்தி திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என பாராளுமன்ற லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

லோக்சபையில் நேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர்  கே.காமராஜ், தமிழகத்தில் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உன்னத திட்டமான விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா செயல்படுத்தியதாக தெரிவித்தார். இத்திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.  காமராஜின் கோரிக்கையை, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் உறுதி அளித்தார்