விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம்  வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

சனிக்கிழமை, மார்ச் 19, 2016,

கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உன்னத திட்டமான, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடியே 90 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார். பசுமை வீடுகள் திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தை, கடந்த 2011-ம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்கும் வகையிலும், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் அமைந்துள்ளது இந்தத் திட்டம். இத்திட்டத்தின்கீழ், கிராமசபை மூலம் தேர்வு செய்யப்படும் பயனாளிகள், ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கறவைப் பசுக்கள் வாங்கி வழங்கப்படுவதோடு, தீவனமும் மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,200 பயனாளிகளுக்குகறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப பொருளாதார உயர்வுக்கு வழிவகுப்பதோடு, குழந்தைகளுக்கு தினசரி சத்தான பால் கிடைக்கவும் வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

கறவைப் பசுக்களின் ஆரோக்கியத்தை, கால்நடை மருத்துவர்கள் அவ்வப்போது பரிசோதித்து வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான, நாட்டிற்கே முன்னோடி திட்டமான, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தால், ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.