விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைப்பெற்ற மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைப்பெற்ற மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. சிறப்பு முகாமினை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், கால்நடை மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்புதுப்பட்டு கிராமத்தில் மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் நடைபெற்றது. இம்முகாமினை அமைச்சர் திரு. பா. மோகன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு கால்நடை தீவனம் மற்றும் மருந்துகளை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் இந்த மருத்துவ முகாமில் தடுப்பூசிகள் போடப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.