ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுங்கள் : பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுங்கள் : பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,

புதுடில்லி : தமிழகத்தில் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இன்று டில்லி சென்றிருந்த முதல்வர் எடைப்பாடி பழனி்சாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.முக்கியமாக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்திள்ளேன்.தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் நிதித்துறை செயலாளர், சண்முகம், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.