ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

ஊட்டியில் 1கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை-லாபத்தொகை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு – விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 12,2016,

ஊட்டியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் இன்ட்கோ சர்வ் மூலம் 1 கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைத்த லாபத்தொகை முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பயனடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதையடுத்து, சிறு குறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி ஊட்டி டீ என்ற தேயிலை தூளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இந்த டீ தூள் தமிழகத்திலுள்ள 42 ஆயிரம் நியாய விலை கடைகள் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இன்ட்கோ சர்வ் மூலம் 1 கோடியே 78 லட்சம் கிலோ ஊட்டி தேயிலை விற்பனை செய்யப்பட்டு, இதன்மூலம் 31 கோடியே 48 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த லாபத்தொகை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தொழிற்சாலைகளில் அங்கத்தினராக உள்ள 24 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேயிலை விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஊட்டி டீ திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.