10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன் , பெப்ரவரி 25,2016,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,  முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை  இன்று  தே.மு.தி.கவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி  கே. தமிழ்அழகன், பேராவூரணி  தொகுதி நடிகர் சி. அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம்   சுரேஷ் குமார், சேந்த மங்கலம்   சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் க. பாண்டியராஜன், திருத்தணி மு. அருண் சுப்பிரமணியம் ஆகியோரும்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக் கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கலையரசு; புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக் கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோரும் நேரில் சந்தித்து தங்களைக் கழகத் தின் அடிப்படை உறுப்பி னர்களாக இணைத்துக் கொண்டனர்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத் துக் கொண்டதற்காக, முதல்- அமைச்சர் ஜெய லலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அ.தி.மு.க.வில் இணைந்த 10 பேர்களும் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தபோது நிருபர்கள் பேட்டி கண்டனர்.அப்போது மா.பா. பாண்டியராஜன், சுந்தர் ராஜன் ஆகியோர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சேர்ந் ததை நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். தாயுள்ளத்துடன் முதல்- அமைச்சர் அம்மா எங்களை கட்சியில் சேர்த்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவோம் என்றனர்.சட்டசபை தேர்தலில் போட்டியிட உங்களுக்கு ‘சீட்’ தருவதாக ஏதும் உறுதி அளிக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு, புரட்சித் தலைவி அம்மாவை நம்பி வந்துள்ளோம். அவர் எங்களுக்கு நல்லது செய்வார் என்றனர்.