11 கோடி ரூபாய் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

11 கோடி ரூபாய் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி வழங்கிய  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

சனி, ஜூன் 11,2016,

தூத்துக்குடியில் 20 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியாக 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல்வளத்தை பாதுகாக்கவும், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 30-ம் தேதி வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுகிறது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை முதலமைச்சர் உத்தரவுப்படி வழங்கப்படுகிறது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாயும், மீன்பிடி குறைவான காலத்தில் நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.