13 மீனவர்களையும், 85 படகுகளையும் விடுவிக்க விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

13 மீனவர்களையும், 85 படகுகளையும் விடுவிக்க விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனிக்கிழமை, ஏப்ரல் 09, 2016,

இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள13 தமிழக மீனவர்களை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,  புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடல் பகுதியில் இருந்து 9 தமிழக மீனவர்கள் எந்திர படகில் மீன்பிடிக்கச்சென்றபோது அவர்களை இலங்கை கடற்படை 7-4-2016அன்று அதிகாலை நேரத்தில் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது. கடந்த 5-4-2016 அன்று 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சில நாளில், இந்த  9மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது ஆகும்.

சர்வதேச கடல் சார் எல்லை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.  கடந்த 1974ம் ஆண்டு மற்றும் 1976ம்ஆண்டுகளில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும். பாக் ஜல சந்தி பகுதி தமிழக மீனவர்களின் பாரம் பரிய மீன் பிடி பகுதியாகும்.  அந்த நீர் எல்லை பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து குறுக்கிடுகிறார்கள். இதனால் நமது மீனவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நீங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து  உரிய முடிவு காண வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 13தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை கைப்பற்றி சென்றுள்ள  85 மீன் பிடி படகுகளை விரைவாக விடுவிக்க நீங்கள் நேரடியாக தலையிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். 7-4-2016அன்று கைது செய்யப்பட்டுள்ள  9தமிழக மீனவர்கள் உள்பட 13 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசு நிர்வாகத்திடம்பேசி நடவடிக்கை எடுக்க  நீங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.