23 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

23 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, ஜனவரி 03,2016,

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்களின் குடும்பங்களுக்கு காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல், அரசு ராயப்பேட்டை மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பால்ராஜ்;

தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன்;

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஷாஜகான்;

சேலம் மாநகரம், அழகாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முத்துசாமி;

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செல்வம்;

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மார்ட்டின் கென்னடி;

சென்னை பெருநகரக் காவல், தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குணசேகரன்;

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிங்காரவடிவேலன்;

திருண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அன்பழகன்;

தேனாம்பேட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோவிந்தராமன்;

தாராபுரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தராஜன்;

விருதுநகர் மாவட்டம், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பொம்மன்; ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மோகன்;

சென்னை பெருநகர காவல், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த நடராஜன்;

சென்னை பெருநகர காவல், பல்லாவரம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்;

பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பலராமன்;

திருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ்;

சென்னை பெருநகரக் காவல், காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மகபூப் பாஷா; ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த்;

கடலூர் மாவட்டம், மந்தாரகுப்பம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த மனோகர்;

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10–ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த வெங்கட்ராஜன்;

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மருதன்; ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரக் காவல், வெடிகுண்டு கண்டு பிடித்தல் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த பழனி வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.