234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவை வெற்றியடைய செய்து 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்த கழக மாணவர் அணி சூளுரை

234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவை வெற்றியடைய செய்து 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்த கழக மாணவர் அணி சூளுரை

வியாழக்கிழமை, ஜனவரி 07, 2016,

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி 6–வது முறையாக மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க அண்ணா தி.மு.க. மாணவர் அணி சூளுரைத்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் விளக்கவும் மாணவர் அணி முடிவு செய்துள்ளது.கருணாநிதியின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் என்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.
அண்ணா தி.மு.க. மாணவர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாணவர் அணி துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா. கண்ணன், எம்.டி.பாபு முன்னிலை வகித்தனர்.பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராம. சரவணன் , கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, வரவேற்றார்கள்.கழக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், கழக தலைமை நிலையச் செயலாளரும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன், கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா. வளர்மதி, ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் அஸ்பயர் கே. சுவாமிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்பின் வடிவமாய், கருணையின் இருப்பிடமாய், ஏழை- எளிய மக்களை காக்கும் காவல் தெய்வமாய், ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தன்னையே மெழுகுவர்த்தியாய் உருக்கி, தமிழக மக்களுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையாலும் அறிவார்ந்த மதிநுட்பத்தாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையால் வரலாறு காணாத வடகிழக்கு பருவ மழை, கடுமையான வெள்ள பாதிப்புகளினால் உயிர் சேதம், பொருட் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டு சிறப்பான முறையில் மழை -வெள்ள நிவாரண மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான கழக அரசு மக்களுக்காக பணியாற்றுகின்ற அரசாக, வட கிழக்கு பருவ மழையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அதனை மீட்டுக் கொடுத்திட நிவாரணத் தொகையாக பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13,500-ம், நீண்ட கால பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.18,000-ம், மானாவாரி பயிர்களுக்கு ரூ. 7,410-ம், இறந்த கால்நடைக்கு ரூ.30,000-ம், ஆட்டிற்கு ரூ.3,000-ம், கோழிக்கு ரூ.100-ம், முழுவதும் சேதமடைந்த குடிசைக்கு ரூ.10,000-ம், 10 கிலோ அரிசி, வேட்டி சேலை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000-ம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, வீடு இழந்தோருக்கு புதியதாக 50,000 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயை தாயுள்ளத்தோடு வழங்கியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சையும், நிதியுதவியும் அளித்து நிம்மதி இழந்து பரிதவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் மறுவாழ்வு தந்து காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கழக மாணவர் அணி கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
மத்திய அரசு நிவாரண உதவி
நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வரலாறு காணாத கன மழையால் தமிழகத்தில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகள் மழை, வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். முதல்வரின் தலைமையிலான கழக அரசால் அசுர வேகத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கன மழை வெள்ள பாதிப்பு ‘‘கடுமையான இயற்கை பேரழிவு” என மத்திய அரசும் அறிவித்துள்ளது. வெள்ள சேதம் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் துயரங்களை போக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மறு சீரமைக்கவும் தமிழக அரசுக்கு தேவையான 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கவும், வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 19 ஆயிரத்து 100 கிலோ லிட்டர் மண்எண்ணை கூடுதலாக வழங்கவும், முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கழக மாணவர் அணி வலியுறுத்துகிறது.
கருணாநிதியை விரட்டுவோம்
மத்திய காங்கிரஸ் அரசில் 16 ஆண்டுகள் பங்கு கொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜீவாதார உரிமைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய ஊழலான 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் 1,76,000 கோடியை கொள்ளையடித்து உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம்பிடித்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து தீயசக்தி கருணாநிதி மற்றும் அவரது கட்சியினரின் பல்வேறு ஊழல்கள், தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு அதிகார முறைகேடுகள், நில அபகரிப்புகள் முதலானவற்றின் உண்மைகளையும் குடும்ப வாரிசுகளுக்கே பல கட்சிப் பதவிகளை பங்கிட்டு கொடுத்து குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்ற தீயசக்தி கருணாநிதியும், ஸ்டாலினும் பொய் அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திவிடலாம், பொது மக்களை நம்ப வைத்துவிடலாம் என தினந்தோறும் பொய்யான வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் தீயசக்தி கருணாநிதியின் முகத்திரையை கிழித்திடும் வகையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சுயநலவாதிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீயசக்தி கருணாநிதியும், ஸ்டாலினும் எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழக மக்கள் அவர்களை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டுமாய் கழக மாணவர் அணி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடி திட்டங்களையும், முன்னேற்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தை தொழில் துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்கிடவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும், தமிழகத்தில் தொழில் புரட்சி” ஏற்படுத்திடவும், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டினை” சிறப்பாக நடத்தி இரண்டே நாளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகளை தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும், இந்திய நாடே வியக்கும் வகையில் தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதல்வருக்கு கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
இந்திய மக்கள் அனைவரது இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளைஞர்களின் கனவு நாயகன்” டாக்டர் அப்துல் கலாம் 21-ம் நூற்றாண்டில் உலகம் மெச்சிய தமிழர் என்றால் அது மிகையல்ல. இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் டாக்டர் அப்துல் கலாம் தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளை நாடு நன்கு அறியும்.
டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி இளைஞர் எழுச்சி நாள்” என்று ஆண்டுதோறும் தமிழக அரசால் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்
டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவ, மாணவியர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்றும் ஆணையிட்டிருக்கிறார். டாக்டர் அப்துல் கலாமை எதிர் காலச் சந்ததியினரும் அறிந்து போற்றும் வகையில் அவருடைய திருவுடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கத் தேவையான இடத்தையும் வழங்கி உள்ளார்.
அறிஞர்களையும், ஆற்றலாளர்களையும், தேச பக்தர்களையும், போற்றி வணங்குவதில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் முதல்வர் ஜெயலலிதா, டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்ற மேற்கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான நடவடிக்கைகளுக்கு கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது.
‘‘ஜல்லிக்கட்டு” என்ற வீர விளையாட்டு சங்க காலம் முதல் கடந்த பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின் சாகச விளையாட்டு. இது தமிழர்களின் வீர மரபோடு இரண்டறக் கலந்த ஒன்று. பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் ‘‘ஜல்லிக்கட்டு” தமிழகத்தில் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர, மிருக வதை அல்ல என்ற பண்பாட்டு உண்மையை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஓர் அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது ‘‘ஜல்லிக்கட்டு” நடத்தப்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வரின் வழிநின்று மத்திய அரசை வலியுறுத்தியும், முந்தைய மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்த போது தமிழர்களின் வீர விளையாட்டான ‘‘ஜல்லிக்கட்டினை” தடை செய்யும் வரை வாய் திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, காலச் சூழ்நிலைக்கேற்ப சுயநல, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தீயசக்தி கருணாநிதிக்கும், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கும் கழக மாணவர் அணி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அண்ணா தி.மு.க.விற்கு எத்தகைய சோதனைகள் ஏற்பட்டாலும் அதனை தன்னுடைய மதி நுட்பத்தாலும், மனத் துணிவாலும் எதிர்கொண்டு வெற்றி காண்கிற ஆற்றல் பெற்றிருக்கின்ற முதல்வர் தலைமையிலான கழக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளான தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது; முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது; தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான கச்சத் தீவை மீட்பதற்கு நீதிமன்றத்தின் மூலம் உரிமையினை நிலை நாட்டவும் மற்றும் சரித்திர சாதனை திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை, விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர், அம்மா உணவகம்; அம்மா மருந்தகம்; அம்மா குடிநீர்; அம்மா சிமெண்ட்; மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அம்மா திட்டம்; உழவர் பாதுகாப்பு திட்டம்; தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்; திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்; சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்; குழந்தைகள் நலன் காக்கும் வகையில் 16 வகையான ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’; விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு; பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, நோட்டுப் புத்தகம், பாடப் புத்தகம், சீருடை, காலணிகள், கல்வி உதவித் தொகைகள்; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு முன்னோடி திட்டங்களை இந்திய நாட்டிற்கே அறிமுகம் செய்து, இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத சாதனைகளைச் செய்து, தெற்கு ஆசியாவிற்கே முன் மாதிரியாக அன்னை தமிழகத்தை வழிநடத்தி ஏழை, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி வருகின்ற முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான கழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை பட்டிதொட்டியெங்கும், பள்ளி-கல்லூரிகள் தோறும் சாதனை விளக்க பிரச்சாரத்தினை தொடர்ந்து மேற்கொள்வதோடு, 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெறவும், தமிழகத்தின் முதலமைச்சராக 6-வது முறையாக மீண்டும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்கும் வகையில் தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப் பணியாற்றுவது என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.