26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

அ.தி.மு.க. அரசின் வரலாற்றுச்சாதனைகளை விளக்கிக்கூறும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களிடையே விளக்குதல், குறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள், தேர்தல் பணிகள், இணைப்புச் சங்கங்களின் செய இணைப்புச் சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக, வரும் 26- ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டங்கள் பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெறும்.

கூட்டம்நடைபெறும் இடம்பங்குபெறும் மாவட்டங்கள்:-
1. 26-ம் சேதி காலை 10 மணி திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
2. 27-ம் தேதி காலை 10 மணி மதுரை மாநகர், மதுரை புறநகர் , தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.
3. 28-ம் தேதி –காலை 10 மணி திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர்.
4. 29-ம் தேதி காலை 10 மணி கோவை மாநகர், கோவை புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், நீலகிரி.
5. மார்ச் 1-ம் தேதி –காலை 10 மணி தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,
6. மார்ச் 2-ம் தேதி –காலை 10 மணி விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,
7.மார்ச் 3-ம் தேதி –காலை 10 மணி வட சென்னை வடக்கு,வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், தொழிற்சங்கப் பேரவைமாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணாதொழிற்சங்கச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களில் உள்ள இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஆலோசனைக்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.