முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்

செவ்வாய்கிழமை, ஜனவரி 05, 2016,

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,733 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி வழங்கப்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி, கைத்தறி, துணிநூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1090 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 532 பேருக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 589 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 522 பேருக்கும் என மொத்தம் 2,733 பேருக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கும் தங்கமும் வழங்கப்பட்டன.கடந்த 4 ஆண்டுகளில் 19,621 பேர் பயனடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொண்டனர்.