3 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா பேசும் குறும்படத்தை காட்டி அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு

3 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா பேசும் குறும்படத்தை காட்டி அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு

சனி, நவம்பர் 05,2016,

அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள்,   திட்டங்கள் ஆகியவற்றை குறும்படமாக தயாரித்து  அதை   பொது மக்களுக்கு  ‘டேப்’ மூலம் காண்பித்து வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அ.தி. மு.க.வினர் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி. மு.க.வினர்  வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

தஞ்சை தொகுதியில் காண்பிக்கப்படும் குறும் படத்தில்  “காவிரி பிரச் சினைக்காக  சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி  காணும் காவிரித்தாய்,   நமது முதலமைச்சர் அம்மா என்று காண்பிக்கப்படுகிறது. இறுதியில் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்று  முடிக்கப்படுகிறது.

சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த குறும்படத்தை பார்க்கும் பொதுமக்கள் பலர் வாட்ஸ்-அப்பில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர்.
இதேபோல்  அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில்  அ.தி.மு.க. ஆட்சியின்  சாதனைகள், ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்கள், சாதனை களை குறும்படமாக தயா ரித்து ‘டேப்’ மூலம் மக்களுக்கு காண்பித்து ஓட்டு  கேட்டு வருகின்றனர்.

இதுபற்றி  அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில் ;

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை நாங்கள் குறும்படமாக தயாரித்து அதை மக்களுக்கு ‘டேப்’ மூலம்  காண்பிப்பதுடன், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய வற்றிலும்  வெளியிட்டு வருகிறோம்.அ.தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனைகளை குறும் படமாக 2 நிமிடம் ஓடக்கூடிய அளவில் தயாரித்து அதை யும் செல்போன் மூலம் பார்க்கும் வகையில் வெளி யிட்டு வருகிறோம்.”என்று அவர் கூறினார்.