3 தொகுதி தபால் ஓட்டு ; ராணுவ வீரர்களும் அ.தி.மு.க.,பக்கம்

3 தொகுதி தபால் ஓட்டு ; ராணுவ வீரர்களும் அ.தி.மு.க.,பக்கம்

புதன், நவம்பர் 23,2016,

நடந்து முடிந்த தஞ்சாவூர், அரவக்குறி்ச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.இதில் பதிவான தபால் ஓட்டில் பெரும்பாலான ஓட்டுகளை அ.தி.மு.க பெற்றது.

மூன்று தொகுதிகளிலும், ராணுவம், துணை ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை போன்றவற்றில் பணிபுரிவோர், தபால் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் தொகுதியில் பதிவான, 30 ஓட்டு களில், அ.தி.மு.க.,வுக்கு, 29 ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கு ஒன்றும் கிடைத்தது. திருப்பரங் குன்றம் தொகுதியில், 48 ஓட்டுகள் பதிவாகின; இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. மீதமுள்ள ஓட்டுகளில், 44 அ.தி.மு.க.,விற்கும், ஒரு ஓட்டு தி.மு.க.,விற்கும், ஒரு ஓட்டு சுயேச்சைக்கும் கிடைத்தது.இதன் மூலம் ராணுவ வீரர்களும் அ.தி.மு.க.,பக்கம் தான் உள்ளனர் என தெளிவாகி உள்ளது.